முகப்பு

அனைவரையும் எனது இணையதளத்திற்கு வரவேற்கிறேன் !!

ஜோதிடம்............பிரபஞ்சம் தோன்றிய காலத்திலேயே ஜோதிட கலையும் தோன்றியது. இது வேதத்தின் ஒரு அங்கம். இந்த ஜோதிடமானது எல்லோருக்கும் பயன்தரத்தக்க விஞ்ஞானம் ஆக விளங்குகிறது. இந்த பிரபஞ்ச பெருவெளியில் சஞ்சரித்து கொண்டிருக்கும் கிரகங்களின் நிலையைக் உணர்ந்து அது பூமியின் மீதும் அதில் வாழும் மானிடர்கள் மீதும் வீசுகின்ற காந்த அலைகளின் சஞ்சாரம் பற்றி சொல்கின்ற சாஸ்திரம் தான் ஜோதிடம். இந்த கிரகங்களின் சக்தி ஒவ்வொரு மனிதனையும் எவ்வாறு எந்த அளவு பாதிக்கிறது என்பதை தெரிவிப்பது தான் ஜாதகம். நேற்று இருந்த இடத்தில் இன்று இந்த கிரகங்கள் இருப்பதில்லை அவை சுழன்றுகொண்டே இருக்கின்றன.

எனவே, எது வேகமாக நகர்கின்றதோ. அதைக் கொண்டு தான் ஒவ்வொரு ஜாதகத்திற்கும் தனித்தன்மையை தர வேண்டும். எனவே, நாம் ராசியை விட லக்னத்தின் மூலம் அன்று பிறந்தவர்களை வேறுபடுத்தி கணிதம் செய்கின்றோம். பலனையும் லக்னத்தையும் கொண்டு நிர்ணயும் செய்கின்றோம். இதுவும் இரண்டு மணி நேர கால அளவு கொண்டது.

ஆனால், ஒரு சில வினாடிகள் மாறினாலும் கூட ஜாதகத்தின் நிலை பலன்கள் யாவுமே மாறிபோகும். ஏனென்றல், ஒரு லக்ன இடைவெளியில் சுமார் 6000 பேர் இந்த நாட்டில் பிறக்கின்றனர். ஒருவரைப்போல இன்னொருவர் இல்லை, இருக்கவும் வாய்ப்பில்லை. ஒரு லக்னத்திற்கு எழுதப்பட்ட கோட்பாடுகளை பொருத்திக் கூறாமல் ஒரு சில மணித்துளிகளில் உங்கள் ஜாதகத்தை வேறுபடுத்தி பலன் கூறுவது தான் இந்த இணைய தளத்தின் நோக்கம். நடப்பது நடந்தே தீரும் என்ற எண்ணத்தில் யாரும் சாலையின் குறுக்கே கண்களை மூடிக்கொண்டு செல்வதில்லை. சாலையின் இடப்புறம் செல்வது தான் சாலை விதி அதன்படி தானே செல்ல முயற்சிக்கிறோம். விளைவுகளை தெரிந்து கொண்டு விட்டால் கூடுதல் பாதுகாப்பை நாம் உறுதி செய்து கொள்ளலாம்.

உங்கள் பிரச்சனைகள் எதுவானாலும் அதை சுலபமாக தெரிந்து கொள்வதில் மூலம், நாம் அவற்றை மனோதிடத்துடன் எதிர்கொண்டு, இயற்கை என்னும் கடவுளை வணங்கி, அனுசரித்து நம்மை நாமே பாதுகாத்துகொள்ள முடியும். கிரகங்களின் வேகத்தை எதிர்கொள்ள இந்த இணையத்தளம் ஒரு சிறந்த வழிகாட்டியாக விளங்கும். மேலும், ஜோதிடம் தொடர்பான ஒரு புதிய வகை அறிவியல் சார்ந்த அனுகுமுறையானது இந்த இணைத்தளம் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment