Tuesday 12 April 2016

உடலை வருத்தி செய்யும் உடற்பயிற்சி தேவைதானா?




உடலை வருத்தி செய்யும் உடற்பயிற்சி தேவைதானா?

பெரும்பாலோனருக்கு (70% to 75% பேருக்கு) மிதமான உடற்பயிற்சி என்றாலே பாகற்காயை உண்பது போல இருக்கும், பிறகு கடுமையான உடற்பயிற்சி என்றால் எப்படி இருக்கும் என்பது உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். ஆனால், ஆனால், வேறு ஒரு பிரிவினர் (category) இருக்கிறார்கள்.....உடற்பயிற்சியை கடவுளுக்கு நிகராக பாவித்து (அதற்கும் மேலே) தன் உயிர் மூச்சாக  நினைத்து ஒரு நாளில் குறைந்தது 4 முதல் 6 மணி நேரமோ அல்லது அதற்கு மேலேயும் கடுமையான முறையான உடற்பயிற்சியை மேற்க்கொள்கிறார்கள். அதனால் உண்டாகும் உடல் வலியையும் பொருட்படுத்தமாட்டார்கள். இது எப்படி சாத்தியம்?? நமக்குள் ஒரு கேள்வி எழுகின்றது. உடல் வலி என்பது எல்லோருக்கும் ஒன்றுதானே, இவர்களுக்கு மட்டும் எப்படி சாத்தியப்படுகின்றது என்று??  உடற்பயிற்சி என்பது உடலுக்கு நல்லது என்று அனைவரும் அறிந்ததே, ஆனால், ஏன் 25% to 30% பிரிவினருக்கு மட்டும் எப்படி இது சாத்தியப்படுகிறது, மற்றவர்களுக்கு அதைப்பற்றி யோசிப்பதற்கே தயங்குகிறார்கள் என்று!!. உடற் ரீதியாகவும் மனரீதியாகவும் இவர்களுக்குள் என்ன வித்யாசம் - இதைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

பொதுவாக, உடல் நன்கு இயங்க ஒரு விதமான சமநிலை உஷ்ணம் உடலுக்கு தேவைப்படுகிறது.. அந்த சமநிலை உஷ்ணத்தின் மூலம் உடலிலுல்ல இரத்தம், தசைகள், தசைநார்கள், நரம்புகள், எலும்புகள், தோல்கள் நன்கு வலிமைப் பெற்று அதனது வேலையை எந்த வித பாதிப்புகளின்றி செவ்வனே செய்கின்றது. ஆனால், உடலில் ஏற்படும் தட்ப வெப்ப மாறுபாடுகளால் மேற்கூறிய இயக்கங்களில் முதலில் சிறிது தடை ஏற்படுகிறது. இந்த மாறுபாடுகள் தொடருமானால் சிறிய அளவில் ஏற்பட்ட தடை பெரியதாகி உடலில் உள்ள உள்ளுறுப்புகள் பாதிப்படைகின்றது. ஆகையால், உடலியக்கம் நன்கு வலிமை அடையவேண்டுமென்றால் உடலில் உள்ள தட்ப வெப்பம் சமநிலை என்ற விகிதத்திற்க்கு முக்கியத்துவம் பெறுகின்றது. உடலில் சமநிலை உஷ்ணம் பாதிக்கப்பட்டு குளிர்ச்சி அதிகமானால் உடலியகத்தில் மாறுதல் ஏற்பட்டு தசைகள், தசைநார்கள், நரம்புகள் பாதிப்படைந்து வேகத்தடை ஏற்படுகின்றது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் எந்த காரியத்தையும் விரைவாக செய்ய இயலாது (Hypo-Active). வயது குறைந்தவர்களாய் இருந்தாலும் மெதுவாகத்தான் இயங்குவார்கள்.  இவர்கள் முன்புபோல் வேகமாக இயங்க உடலின் குளிரிச்சியை குறைத்து உஷ்ணத்தை சமநிலை செய்தாலேயே சரியாகிவிடும். இதற்கு நேரெதிராக உடல் உஷ்ணம் அதிகமானால் உடல் (Hyper-Active) ஆக செயல்படும். இரத்தம், நரம்புகள், தசைகள், தசைநார்கள் மிக வீரியத்துடன் செயல்படும். ஆனால், இதுவும் உடலுக்கு தீங்கானது ஆகும். இதைச் சரிசெய்ய உடலில் உள்ள உஷணத்தை குறைத்து குளிர்ச்சியை சமநிலை செய்தாலே உடல் இயக்கம் சீராகும். ஆகையால் ஒருவர் Active or In-Active ஆக இருக்கிறார் என்பதை உடலில் உள்ள உஷ்ணநிலை தான் தீர்மானிகின்றது. இதை வைத்து தான் ஒருவர் சாதாரண உடற்பயிற்சி செய்வதும் அல்லது கடுமையான உடற்பயிற்சி செய்வதும் அல்லது எதுவுமே செய்யாதிருப்பதும் தீர்மானிக்கபடுகின்றது.

இங்கு ஒரு கேள்வி எழுகின்றது? உடற்பயிற்சி செய்தால்தான் உடலுக்கு நல்லது, இல்லையென்றால் பலவித நோய்கள் தாக்கி (OBESITY, B.P. DIABETICS, HEART ATTACK, ETC) உடலுக்கு தீங்கு ஏற்பட்டு மரணம் கூட ஏற்படலாம் என்ற தவறான கண்ணோட்டம் நம்மிடயே இருக்கின்றது என்று சொல்வதைவிட நம்மேல் திணிக்கப்பட்டுவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. நம் உடல் இயற்கையாக எப்படி கட்டமைக்கப்பட்டது என்பதைப் பொறுத்தே உடற்பயிற்சியின் தேவைகளும் மாறுபடுகின்றது. இதை நமது உயர் கணித சார ஜோதிட ரீதியாக அணுகினால் நமக்கு வியக்கத்தக்க பதில்கள் நிரம்ப கிடைக்கும்.

சார ஜோதிடத்தில், செவ்வாய் கிரகம் உடல் வலிமைக்கு காரகமாய் இருந்தாலும் , குரு, புதன் ஆகிய கிரகங்களும் துணைக்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், உடலில் உள்ள கொழுப்பிற்கும், கல்லீரலுக்கும் குருவும், புதன் கிரகம் உடலில் ஏற்படும் தட்ப வெப்ப சமநிலையை சரிசெய்து அனைத்து உறுப்புக்கும் இரத்தம் மூலம் வேகத்தை ஒழுங்குப்படித்தி உடலை நன்கு இயக்குகின்றது.

ஒருவருக்கு, இந்த மூன்று கிரகங்களும் (செவ்வாய், புதன், குரு) தான் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம்  மூலம் ஒற்றைப்படையில் (1,3,5,7,9,11) தொடர்பு கொண்டு, மற்றும் 1 & 3 பாவங்கள் ஒற்றைப்படையில் (1,3,5,7,9,11) தொடர்பு கொண்டவர்கள்தான், மிதமான உடற்பயிற்சியோ அல்லது கடுமையான உடற்பயிற்சியோ எதுவம் தேவைப்படாது. அவர், எந்த விதமான உடற்பயிற்சியும், செய்யாமலேயே நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார். இன்னும் தெளிவாக கூறவேண்டுமென்றால்...............

ஒருவருக்கு செவ்வாய் தான் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம்  மூலம் ஒற்றைப்படையில் (1,3,5,7,9,11) தொடர்பு கொண்டால்  –- அவருடைய உடலின் உஷ்ணநிலை, தசைகள், எலும்பு மஜ்ஜைகள், இதயத்துக்கு இரத்தம் கொண்டு வரும் இரத்த நாளம் ஆகியவைகள் நன்கு சரிவிகித சமநிலையோடு இயங்கும். இரத்த நாளங்கள் நன்கு இயங்குவதால், அனைத்து உறுப்புகளுக்கும் எந்தவித தடையுமின்றி இரத்தம் சீராகப் பெற்று நன்கு இயங்குவதால் உடலில் சோர்வு என்பதே இருக்காது, எவ்வளவு வேலைகள் செய்தாலும் உடல் நன்கு ஒத்துழைக்கும். உடல் உஷ்ண சமநிலை இயற்கையாகவே நன்கு அமையபெற்றிருப்பதால் குளிர்ச்சி மூலம் சிறிது தடைகள் ஏற்பட்டாலும் உடல் தானாகவே சரிசெய்து கொள்ளும் கொடுப்பினைப் பெற்றிருக்கும். தசைகள், எலும்பு மஜ்ஜைகள் ஒன்றுக்கொன்று இணைந்து பிணைந்து செயல்படும். ஆகையால், இவர்களுக்கு உடற்பயிற்சி என்பதே தேவைப்படாது. உடலும் நன்கு வளைந்து கொடுக்கும். இவர்கள் அணைத்து விதமான வேலைகளும் எவ்வித சிரமுமின்றி செய்வார்கள். இவர்கள் உடலில் கொழுப்பும் தங்காது, ஏனென்றால் சரிசதவிகித உடல் தட்ப வெட்ப நிலையால் அப்போதைக்கு அப்போதே கொழுப்பு எரிக்கப்பட்டுவிடும். உடலில் கொழுப்பு தங்காது.

ஒருவருக்கு குரு தான் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம்  மூலம் ஒற்றைப்படையில் (1,3,5,7,9,11) தொடர்பு கொண்டால் --- இவருடைய கல்லீரல், பித்தப்பை ஆகியவற்றின் இயக்கங்கள் நன்கு அமைய பெரும்.. அதனால், பித்தப்பை  மூலம் உருவாகும் பித்தநீர் உடலில் உள்ள சாதாரண முதல் கடினமான கொழுப்பை விரைவாக கரைத்து, நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என்று பகுத்து பிரித்து, நல்ல கொழுப்பை தோல்களுக்கு பயன்படுத்தி, கெட்ட கொழுப்பை உடலில் தேங்காமல் வெளியேற்றி உடல் இயக்கத்தை ஒழுங்குப்படுத்துகிறது. மேலும், கல்லீரல் நன்கு அமையபெற்றிருப்பதால் இரத்தத்தில் உள்ள தேவையற்ற தாதுக்களையும், ரசாயனங்களையும், கொழுப்புகளையும் முழுவதுமாக வெளியேற்றி இரத்தத்தை சுத்திகரித்து உடலில் உஷ்ணத்தை சமநிலைப்படுத்துகிறது. இவ்வாறான செயல்களால் உடலின் தட்ப வெப்ப நிலை பாதுகாக்கபடுவதால் உடலில் உள்ள எலும்புகள் நன்கு வளைந்து கொடுக்கும். உடலில் ஒரு STIFFNESS இருக்காது. ஆகையால், இவர்களுக்கும் உடற்பயிற்சி தேவைப்படாது.

ஒருவருக்கு புதன் தான் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம்  மூலம் ஒற்றைப்படையில் (1,3,5,7,9,11) தொடர்பு கொண்டால் --- இவருடைய உணர்வு புலன்கள், நரம்பு மண்டலம் நன்கு இயங்கும். மூளைக்கும் நரம்பு மண்டலத்துக்கும் ஒருவித தொடர்பு இருப்பதால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் தகவல் பரிமாற்றம் தடைகள் ஏதுமின்றி சீராக செயல்படும். நரம்பு மண்டலம் நன்கு அமையபெற்றிருப்பர் உடலில் எந்த ஒரு பகுதியில்  பாதிப்புகள் ஏற்பட்டாலும் மூளைக்கு உடனே தகவல்களை அனுப்புவது மட்டுமில்லாமல் தேவையான இரத்தத்தை இதயத்தின் துணைக்கொண்டு பாதிக்கப்பட்ட உறுப்புகளில் செலுத்தி பழுதை உடனே சரிசெய்து விடும். இரத்தம், நரம்பு மண்டலம், மூளையும் ஒரு சேர இயங்கும் போது உடல் உஷ்ணம் கட்டுக்குள்ளேயே இருக்கும், ஒருவேளை, அதையும் மீறி செயல்பட்டாலும், நரம்பு மண்டலத்தின் துணைக்கொண்டு தகவல்களை மூளைக்கு உடனே அனுப்பி எங்கு சரிசெய்ய வேண்டுமோ அங்கு சரி செய்து உடல் இயக்கங்கள் மிக விரைவில் தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டு இயங்க ஆரம்பித்துவிடும். இவர்களுக்கு உடல் எப்படி ஒத்துழைக்க வேண்டுமோ அவ்வாறு ஒத்துழைக்கும்.  ஆகையால், இவர்களுக்கும் உடற்பயிற்சி தேவைப்படாது.   

அடுத்து, யார் யாருக்கெல்லாம் உடற்பயிற்சி தேவைப்படுகின்றது என்று பார்ப்போம்?

செவ்வாய் கிரகம், லக்னம் மற்றும் மூன்றாம் பாவத்திற்கு உப நட்சத்திர அதிபதியாகவோ அல்லது உப உப நட்சத்திர அதிபதியாகவோ அல்லது நட்சத்திர அதிபதியாகவோ வந்து தான் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம்  மூலம் லக்னத்தை கெடுக்காத இரட்டைப்படையை (2,4,6,10) தொடர்பு கொண்டு, குரு (1,3,5,7,9,11) தொடர்பு கொண்டவர்கள் , ஒருவர் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை கண்ணும் கருத்துமாக உடற்பயிற்சிக்காக நேரத்தை சிரத்தையுடன் செலவிடுவார்கள்.  உடலும் உடற்பயிற்சிக்காக ஏங்கும் என்று இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி என்பதே உடல்வலியை பொறுத்துக் கொண்டு உடலை வலிமையாக்குவதே ஆகும். ஒருவரின் லக்னம் ஒற்றைப்படையை தொடர்புகொள்ளுமேயானால் அவர் சிறுதுகூட வலி, வேதனைகளை தாங்கமாட்டார் (குறிப்பாக 5, 9 தொடர்பு இருப்பின்). கடின உழைப்பு என்றால் எவ்வளவு கிலோ என்பார். அவர்களுக்கு மனதும் மென்மையாக இருக்கும். அவர்கள் ஒரு SYSTEMATIC  அமைப்பிற்குள் பொருந்த மாட்டார்கள். முறையாக உடற்பயிற்சி மேற்கொள்கிறவர்கள் தினமும் ஒரு குறித்த நேரத்தில் பயிற்சியை செய்வார்கள், ஒரு நாள் தவறினால் கூட எதையோ இழந்ததைப்போல் உணருவார்கள் ஒற்றைப்படையை தொடர்புக்கொண்டர்வர்கள் இந்த அமைப்புக்குள் வரமாட்டார்கள். பொதுவாகவே, இரட்டைப்படையை தொடர்பு கொன்டவர்கள் உணர்ச்சிகளுக்கு இடம் தர மாட்டார்கள், வலி, வேதனை, துன்பம் ஆகியவற்றை கையாள நுணுக்கம் தெரிந்தவர்களாய் இருப்பார்கள். உடல் சுகத்திற்கு ஆசை பட மாட்டார்கள். பணத்தை ஈட்டுவதிலும், தொழில் செய்வதிலுமே குறிக்கோலாய் இருப்பார்கள். அதற்கு எந்த இடைஞ்சல் ஏற்படாதவாறு மிகவும் ஜாக்கிரதையாக இருப்பார்கள். “ சுவர் இருந்தால்தான் சித்திரம் என்ற கொள்கையுடையவர்களாய் இருப்பார்கள். அதனால், GYM, TREADMILL, WALKING  போன்றவற்றில் ஈடுபட்டு உடலை நல்ல முறையில் பேணி காப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.

ஒருவர் 24 மணி நேரமும் ஒரு செயலையோ / கருத்தையோ யோசித்து கொண்டு இருப்பாரேயானால் அவருடைய மூளை, இரத்தம், உடல், தசைகள், நரம்புகள் அனைத்திலுமே அந்த கருத்துகள் ஆணித்தரமாக பதிவாகி இருக்கும். எக்காரணத்தைக் கொண்டும், யாருக்காகவும், எதற்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். இதே கருத்தை, உடற்பயிற்சிக்கான சிந்தனையாக மேற்கூறிய வகையில் பொருத்திப்பார்தால் செவ்வாய் கிரகம், லக்னம் மற்றும் மூன்றாம் பாவத்திற்கு உப நட்சத்திர அதிபதியாகவோ அல்லது உப உப நட்சத்திர அதிபதியாகவோ அல்லது நட்சத்திர அதிபதியாகவோ வந்து  தான் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் மூலம் 2,4,6,10 தொடர்பு கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறது. (குருவின் ஒற்றைப்படை தொடர்பால், கொழுப்பை உடல் கரைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது). லக்னமும், மூன்றாம் பாவமும் செவ்வாயாக வருவதனால் இங்கு மூளையும், மனதும் ஒரே நேர்க்கோட்டில் பயணித்து நினைத்தக் காரியத்தை செய்து முடிக்க வலிமைப் பெற்றிருக்கும். ஏனென்றால், நாம் பல தடவை அனுபவித்திருப்போம், அறிவு சொல்லும் நாளை விடியற்காலை முதல் உடற்பயிற்சியை துவங்கலாம் என்று!!! ஆனால், காலையில் மனம் மாறி தூக்கதிற்க்கு முக்கியத்துவம் கொடுத்து எண்ணத்தை செயலாக்க முடியாமல் திணறுவோம். இது வேறொன்றுமில்லை, எண்ணம், மனது வேறு வேறு பாதையில் பயணிக்கிறது. ஏனென்றால், இங்கு மூளைக்கும், மனதுக்கும் ஒரு பிணைப்பு இல்லை. இதையே, லக்னமும், மூன்றாம் பாவமும் ஒரே கிரகமாக இருந்தால், எண்ணம் தான் மனது, மனது தான் எண்ணம் (நல்லதோ, கெட்டதோ) என்று ஒரேபாதையில் செல்லும், முடிவெடுப்பதில் எந்த சிரமும் இருக்காது. ஆகையால், செவ்வாய் கிரகம், லக்னம் மற்றும் மூன்றாம் பாவத்திற்கு உப நட்சத்திர அதிபதியாகவோ அல்லது உப உப நட்சத்திர அதிபதியாகவோ அல்லது நட்சத்திர அதிபதியாகவோ வந்து தான் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம்  மூலம் லக்னத்தை கெடுக்காத இரட்டைப்படையை (2,4,6,10) தொடர்பு கொண்டவர்கள் உடல் வலியை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள். அடுத்து,

லக்னம் மற்றும் மூன்றாம் பாவம் ‘செவ்வாய்’ ஆக வந்து தான் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் மூலம் 3, 7, 11 தொடர்பு கொண்டு மற்றும்  குரு – 2,6,10 தொடர்பு கொண்டவர்கள் ---- இவர்களும் சந்தோஷமாக உடற்பயிற்சியை மேற்க்கொள்வார்கள், இவர்களுக்கு செவ்வாய் நன்றாக இருந்தாலும், குருவின் இரட்டைப்படை தொடர்பின் (2,6,10)   தூண்டுதலால் உடற்பயிற்சியை மேற்க்கொள்ள கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுகிறாகள். ஏனென்றால், இவர்களுக்கு கொழுப்பை உடல் கரைப்பதில் சிறிது கால தாமதம் ஏற்படும் (2,6,10 தொடர்பால்), ஆனால், செவ்வாயின் ஒற்றைப்படை (3, 7, 11) தொடர்பால் உடல், மனது வீரியத்துடன் செயல்பட்டு அந்த கொழுப்பை கரைக்க போராடி முடிவில் வெற்றிபெறும். ஏனென்றால், லக்னத்தை கெடுக்காத குருவின் இரட்டைப்படை தொடர்பால், இவர்களின் உடல் கொஞ்சம் பூசினாற்போல் அழகாக இருக்கும். இவர்கள், தனது உடல் எங்கே பருத்துவிடுமோ என்ற பயந்து உடற்பயிற்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள், லக்னம் மற்றும் மூன்றாம் பாவமாக செவ்வாய் இருந்து ஒற்றைப்படையை தொடர்பு கொள்வதினால் எண்ணம், மனது ஒன்றாக செயல்படுவதில் எந்த சிக்கலும் இருக்காது.. இவர்கள் உணவு விஷயத்தில் அப்படி, இப்படி இருப்பார்கள், இருந்தாலும் தகுந்த உடற்பயிற்சியின் மூலம் அந்த குறைப்பாட்டை சரி செய்து கொள்வார்கள். இவர்களுக்கு, வயீறு, தொடை, இடுப்பு பகுதியில் சதைப்பற்று கொஞ்சம் இருக்கும், ஆனால், அசிங்கமாக தெரியாது இவர்களுடைய கவனம் அந்த சதைப்பற்றை குறைப்பதில் தான் மிகந்த கவனம் செலுத்துவார்கள். செவ்வாயின் 3,7,11 தொடர்பால் இவர்கள் நிறைய நடைபயணம் மேற்கொள்வார்கள், நடப்பதில், ஓடுவதில் (WALKING, JOGGING) மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள், அவசியப்பட்டால் மட்டுமே வாகனத்தை உபயோகிப்பார்கள், உடற்பயிற்சியை ஒரே மாதிரியாக செய்யாமல் புது புது டெக்னிக் உபயோகித்து மாற்றி மாற்றி செய்வார்கள். இதன் மூலமும் கொழுப்பு உடலில் தங்காது. உடலில் கொஞ்சம் சதைப்பற்று இருந்தாலும் இவர்கள் உடல் நன்கு வளைந்துக் கொடுக்கும். இவர்களுடைய பலவீனம், எளிதில் திருப்தி அடைந்திடுவார்கள். அடுத்து,

லக்னம் மற்றும் மூன்றாம் பாவம் ‘செவ்வாய்’ ஆக வந்து தான் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் மூலம் 4,10 தொடர்பு கொண்டு மற்றும்  குரு – 4,10 தொடர்பு கொண்டவர்கள் ---- இவர்கள் கடுமையான, முரட்டுத்தனமான உடற்பயிற்சி மேற்க்கொள்வார்கள் ஆனால், குருவின் 4,10 தொடர்பால், கொழுப்பு உடலில் இருந்து கரைவதற்கு எவ்வளவு கூலி என்று கேட்கும். ‘4’ன் தொடர்பால் சளைக்காமல் தொடர்ந்து திரும்ப திரும்ப உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள். மேலும், உடற்பயிற்சியை பற்றிய அறிவை நன்கு படித்து தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனாலும், உடல் இளைக்காது, உணவிலும் கட்டுப்பாடு இருக்காது. நடக்கவும் மாட்டார்கள், ஆனால் கடுமையான WEIGHT LIFTING போன்ற உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள் (4,10 தொடர்பால்), இவர்களுக்கு வயிறு, தொடை, புட்டம், இடுப்பு ஆகியவற்றில் மட்டும் நிறைய சதைப்பற்று இருக்கும். உடம்பு கொஞ்சம் கூட வளைந்து கொடுக்காது. என்னதான் உடற்பயிற்சி மேற்கொண்டாலும் அந்த இடத்தில் சதைப்பற்று குறையாது, ஆனாலும், உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள். எளிதில் திருப்தி அடையமாட்டார்கள். அடுத்து

லக்னம் மற்றும் மூன்றாம் பாவம் ‘செவ்வாய்’ ஆக வந்து தான் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் மூலம் 8, 12 தொடர்பு  கொண்டவர்கள் ---- இவர்களும் உடற்பயிற்சியை மேற்க்கொள்வார்கள், ஆனால், 8, 12 லக்னத்திற்கு கெடுதலான பாவமாதலால், லக்னம் பலவிதத்தில் பாதிப்புண்டாகும், இவர்கள் பிரச்சனையில் மாற்றிக்கொண்டு முழிப்பார்கள்.. ஆகையால், இவர்கள் மிகவும் முரட்டுதனமாக பயிற்சியை மேற்கொள்வார்கள் அதனால் லேசான காயமோ அல்லது பலத்த காயமோ அடைவார்கள். அடிபட்ட காயமும் சீக்கிரம் ஆறாது. மேலும், இவர்கள் தமக்கு எந்தமுறை பயிற்சிகள் மற்றும்   உபகரணங்கள் பொருந்தும் என்று கூட தெரியாது. அதனாலேயே, பயிற்சியின் போது அடிக்கடி விபத்துகள் ஏற்பட நேரிடும். பயிற்சி கூடத்தில் பயிற்சியாளரிடமோ, கூட பயிற்சி செய்பவரிடமோ வாய் தகராறோ அல்லது கைகலப்போ ஏற்பட நேரிடும். அப்படியே, பயிற்சி எடுத்தாலும், கடுமையான உடல் வலிகளாளும், தசை வலிகளாளும் அவதிபடுவர். இவர்கள் இயற்கையான முறையில் உடல் வலிமையை கூட்டாமல், செயற்கையான வழியில் அல்லது சட்டத்திற்கு புறம்பான வழியை தேர்ந்தெடுப்பார்கள். அதாவது STEROIDS மற்றும் அங்கீகரிக்கபடாத மாத்திரைகளை உபயோகித்து உடல் வலிமையை அதிகரிக்க முயற்சித்து அதனால் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு முழிப்பார்கள். தாம் உபயோகித்தது மட்டுமில்லாமல் அடுத்தவருக்கும் இதே ஆலோசனை கூறி பிரச்சனையில் மாட்டுவார்கள். மேலும், அடிதடியில் ஈடுபடுவதற்கும், சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்வதற்காகவே உடற்பயிற்சி செய்து உடலை வலிமையாக வைத்துக் கொள்வார்கள்.

ஆகையால், இறுதியாக கூறுவது யாதெனில், ஒருவர் உடற்பயிற்சி செய்தால்தான் உடலுக்கு நல்லது, இல்லையேல், OBESITY, B.P., DIABETICS, HEART PROBLEM  போன்ற நோய்கள் தாக்கும் என்று நினைக்ககூடாது. ஒருவருக்கு கொடுப்பினைகள் நன்றாக அமையும் பட்சத்தில் உடல் தன்னைதானே குணப்படுத்தும் தகுதியை பெற்றிருக்கும், ஆகையால், இவர்கள் உடற்பயிற்சி செய்யவேண்டிய அவசியம் இருக்காது. இவர்கள் மற்றவர்களை பார்த்து உடற்பயிற்சி செய்ய நினைத்து உடலையும், மனதையும் கெடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே, இவர்கள் உடற்பயிற்சி செய்தாலும், சிறிய அளவில் WALKING, STRETCHES போன்ற பயிற்சிகளை செய்தாலே போதுமானது என்று கூறி இக்கட்டுரையை முடிக்கிறேன்.

2 comments:

  1. தங்களின் அற்புதமான அருமையான பதிவுக்கு எமது பாராட்டுக்கள். தங்களின் தெளிவான அறிவியல், மற்றும் ஜோதிட ரீதியான மருத்துவ விளக்கங்கள் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி சார்!!!

    ReplyDelete