Thursday 24 March 2016

தினமும் அலாரம் (ALARM) வைத்து தூங்கும் பழக்கமுடையவரா? இக்கட்டுரையை படித்தால் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வீர்கள்!!!



தூக்கம் என்றால் என்ன? நாம் தினமும் தூங்கித்தான் ஆகவேண்டுமா? ஒரு நாள் அல்லது பல நாட்கள் சரியாக தூங்கவில்லை என்றால் நம் உடலில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகிறது? இது ஒருபுறமிருக்க, தூக்கம் ஒருவருக்கு எதனால் கெடுகிறது? ஏன் அனைவரும் ஆழ்ந்து தூங்குவதில்லை? வேறு என்னென்ன காரணிகளால் தூக்கத்தை தொலைக்கிறோம்?

சரி, தூக்கம் எத்தனை வகைப்படும்? தூக்கம் மூன்று வகைப்படும் 1.மேலோட்டமான தூக்கம், 2. நடுநிலையான தூக்கம்    3. ஆழ்ந்த தூக்கம்

மேலோட்டமான தூக்கம் :
இது உடலில் அசதி, வலி, உடலின்  நீர் சமநிலை பாதிப்பு ஏற்படும் போது சிறிது நேரம் (1/2 hr or 1 hr) கண் மூடி ஒய்வு எடுப்பதின் மூலம் தசைகள் தளர்வாகி, உடலில் ஒரு விதமான புத்துனர்ச்சி ஏற்படும், பெரும்பாலோருக்கு மதிய உணவுக்கு பிறகு ஒரு குட்டி தூக்கம் தேவைப்படும். இதுவும் உடலுக்கும், மனதுக்கும் நன்மை பயக்கும்.

நடுநிலையான தூக்கம்:
இது 100க்கு 80% பேர் மேற்க்கொள்கிற தூக்கம். இவ்வகையான தூக்கத்தில் 50% to 60% தான் உடலுக்கும், மனதுக்கும் நன்மை பயக்கிறது. ஏனென்றால், ஒருவருக்கு தூக்கம் வர வேண்டுமென்றால் மூளைக்குள்ளே SEROTONIN, TOPAMIN என்ற சுரப்பி சுரந்தால்தான் தூக்கம் வரும். இந்த சுரப்பி சுரக்க வேண்டுமென்றால் உடல், புத்தி, மனது மூன்றும் ஒருசேர அமைதி பெற வேண்டும். உடல் மட்டும் அமைதிப் பெற்று புத்தி, மனது அலைபாய்ந்துக் கொண்டிருக்கும் போது நடுநிலையான தூக்கம் மட்டும் தான் வரும்.

ஆழ்ந்த தூக்கம் :
முறையான ஆழ்ந்த தூக்கம் என்றால், உடல், புத்தி, மனது மூன்றும் ஒருசேர அமைதிப் பெற்று தூங்கும் தூக்கமாகும். இவை ஒருசேரப் பெறவேண்டுமென்றால், கிழ்க்கண்ட நான்கு விஷயங்கள் சரியாக அமைய பெற வேண்டும்.

1.இரவு சாப்பிட்ட உணவு தூங்குவதற்குமுன் ஜீரணம் ஆகியிருக்க  வேண்டும்.
2. BODY TEMPERATURE 98.4 F OR 37’0 C ல் உடல் சமநிலையில் இருக்கணும்;
3.பலவித அறிவுசார் பிரச்சனைகளில் பகலில் கலைச்சிபோட்ட புத்தி முறையாக அடுக்கி வைத்திருக்கணும்;
4. பலவித மனதுசார் பிரச்சனைகளில் பகலில் கலைச்சிபோட்ட மனது முறையாக அடுக்கி வைத்திருக்கணும்

இவை நான்கும் சரிவிகிதத்தில் அமைந்தால் நாம் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்ல முடியும், எவ்வாறெனில், தூங்கி எழுந்தவுடன் நாம் எங்கே, எப்போது தூங்கினோம், இன்று தேதி என்ன, நாள் என்ன, கிழமை என்ன, நாம் செய்ய வேண்டிய வேலைகள் என்ன என்று ஒரு சில நிமிடம் நமக்கு எதுவுமே புரியாமல் முழிப்பது தான் சரியான ஆழ்ந்த தூக்கம் ஆகும், இத்தூக்கத்தினால்தான், நம் உள் உறுப்புகளாகிய இதயம், நுரையீரல், மண்ணீரல், கல்லீரல், பெரிகார்டியம், சிறுநீரகம் மட்டுமின்றி, மூளை, நரம்பு மண்டலம், தசைகள், தசைநார்கள் அனைத்தும் ஒருங்கே இரவு முழுவதும் shut down ஆகி மறுநாள் அனைத்து திசுக்களும், இரத்தமும் புதுப்பிக்கப்பட்டு  புத்துனர்ச்சியுடன் தற்தமது வேலையை செய்வனே செய்யும்.

தூக்கம் கெடுவதால் உடலளவில் உண்டாகும் பாதிப்புகள்:
பொதுவாக, இரவு 9 மணியளவில் நமது உடலில் உஷ்ண நிலைகளில் மாறுபாடுகள் அடைகின்றன. உடல் வெப்பம் அதிகமாக ஆரம்பிக்கிறது. அதிகமாகும் உடல் வெப்பம் பெரும்பாலும் கண்களில் பிரதிபலிக்கின்றன.  கண்களில் எரிச்சல் உண்டாகும், கண் இமைகளில் அடிக்கடி கட்டிகள், புண்கள் உண்டாகும். பார்வை கோளாறுகள் உருவாகும். மேலும், கண்களின் பாதிப்பால் உடலின் ஒட்டுமொத்த வெப்ப நிலையும், இன்னும் அதிகமாகும். இதன் காரணமாக வெளிக்குத் தெரியாத ஜூரம் போன்ற ஒரு ஆரோக்கியமின்மை நம்மை அறியாமலேயே நம் உடலில் தங்கும். இது உடல் சோர்வையும், உடல் அயர்ச்சியையும் ஏற்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியைப் பாழடிக்க ஆரம்பிக்கிறது. விடியற்காலையில் எழுந்திருக்கும் பொழுது சோர்வே மிதமிஞ்சி இருக்கும்.

மேலும், அதிகபடியான வெப்பத்தின் காரணமாகவே மேற்சொன்ன சோர்வுகள் நிகழ்கின்றன. இரவு 11 மணிக்கு மேலாக பித்தப்பை இயங்கும் நேரமாகும். இந்த நேரத்தில் தூங்கவில்லை என்றால், பித்தப்பையின் இயக்கக் குறைபாடு உருவாகும். பித்தபைக்கு என்று ஒரு மனநிலை இருக்கிறது. அதாவது, குழப்பமில்லாத, தெளிவாக, விரைவாக முடிவு எடுக்கும் திறனுக்கு பித்தப்பைதான் காரணமாகும். பித்தப்பை பாதிக்கபட்டால் ஏதோ ஒரு விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் திணறிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆகையால், இரவு 11 மணிக்கு நாம் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க வேண்டியது அவசியமாகும். அப்பொழுதுதான் தூங்க ஆரம்பிப்பதும் கெடுதல்தான். பித்தப்பை இயக்கக் குறைபாட்டின் காரணமாக எதிர்காலத்தில் பித்தப்பைக் கற்கள் தோன்றும். அதற்கு பல வருடங்கள் முன்பாகவே அஜீரணமும், வயீற்று உப்புசமும் ஆரம்பமாகும். இவ்விரண்டு கஷ்டங்களும் தூக்கத்தை வெகுவாக பாதிக்கும். இவற்றைத் தவிர்க்க வேண்டுமென்றால் நாம் குறைந்தபட்சம் இரவு 10-10.30  மணிக்காவது தூங்கச் செல்வது பித்தப்பை நோயிலிருந்து தப்பிக்கலாம்

மேலும் உடலளவில் பாதிப்புகளாகிய சிவந்த கண்கள், கண் வலி, சிவந்த முகம், கரும் புள்ளிகள், வாய்க் கசப்பு, வாய் வரட்சி, தாகம், மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் வெளியேறும் சிறுநீர், இறுகிய மலத்துடன் கூடிய மலச்சிக்கல், இரண்டு பொட்டுகளிலும் தெறிக்கும் வலி, இதய படபடப்பு, பளபளப்பு இல்லாத சருமம், வெளிறிய உதடுகள் ஆகியவைகள் ஏற்படும்.

தூக்கம் கெடுவதால் மனதளவில் உண்டாகும் பாதிப்புகள்:
எரிச்சல், விரக்தி, மன அழுத்தம், கடுகடுப்பான முகத்தோற்றம், சிடுசிடுப்பான பேச்சு, எளிதில் கோபப்படுதல், மூர்க்கத்தனமான பிடிவாதம், ஆவேசமாக கத்துதல், கையில் கிடைக்கும் பொருளையெல்லாம் தூக்கி எறிதல், தான் உருப்படாமல் போனதற்கு மற்றவர்கள்தான் காரணம் என்று பிறர் மீது பழி போடும் சுபாவம், மாறிமாறி வரும் மனநிலைகள், முடிவு எடுப்பதில் குழப்ப மனநிலை முதலியவையாகும்.

ஒருபுறம், தூக்கத்தினால் இவ்வளவு உடலளவிலும், மனதளவிலும் பாதிப்புகள் அதிகம் இருந்தாலும், மறுபுறம் நம்மிடத்தில் தூக்கத்தை பற்றி தவறுதலான புரிந்துணர்வே இருக்கிறது. அதாவது,

நமக்கு தூக்கம் என்றால் படுத்தவுடனேயே தூங்கிடனும், அதுதான் ஆரோக்கியம், இல்லையென்றால் நம் உடலில் ஏதோ நோய் இருக்கிறது என்று மனதுக்குள்ளேயே கற்பனைச் செய்துக் கொள்வோம். “ தூக்கம் ஒரு மருந்து “ என்பதற்கு மாற்று கருத்து  ஏதுமில்லை, ஆனால் அதைப் பார்க்கும். முறையில்தான் நம்மிடயே கோளாறு இருக்கின்றது. சரியாக, சொல்லப்போனால், இரவு முழுக்க தூங்கவில்லை என்றாலும் கெடுதல் இல்லை. ஆனால், இரவில் தூங்கவில்லை என்றால் அதைப் பற்றியே பகலில் கவலைப்பட்டுக் கொண்டே இரத்த அழுத்தம் மற்றும் வேறு சில நோய்களால் அவதியுறுகிறோம்.

ஒருவருக்கு வருகிற தூக்கத்தின் அளவு மற்றவருக்கு மாறுபடும். ஒரே மாதிரியான தூக்கம் அனைவருக்கும் பொருந்துவதில்லை. பெரும்பான்மையோருக்கு இருக்கும் கருத்து என்னவென்றால், குறைந்தது ஒருவர் 8 மணி நேரமாவது தூங்கவேண்டுமென்பார்கள். இது முற்றிலும் தவறாகும். உடலை மிகவும் வருத்திக் கொண்டு உழைப்பவருக்கு வேண்டுமென்றால் இது சாலப்பொருந்தும். ஆனால், நாள் முழுவதும் புத்தியும், மனதும் அதிகம் பயன்படுத்தி உழைப்பவருக்கு 4 மணி நேர தூக்கமும் 4 மணி நேர ஓய்வும் போதுமானதாகும். ஓய்வுக்கும், தூக்கத்திற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. அதாவது படுக்கைக்கு சென்றப் பிறகு உடனே தூக்கம் வரவில்லையென்றாலும் கண்மூடி படுத்துக்கொண்டு 4 மணி நேர ஓய்வும், 4 மணி நேர தூங்கினாலே போதுமானததாகும். அடுத்து ஆழ்ந்த தூக்கத்தின் மூலம், பஞ்ச பூத சக்திகளில் ஒன்றான ஆகாய சக்தியை கல்லீரல் மூலம் நாம் பெற முடியும். அதாவது ஆகாய சக்தி முழுமையாக கிடைப்பதானால் கல்லீரலையும், தூக்கத்தையும் ஒரு சேர பாதுக்காத்து  நன்கு அனுபவிக்க முடியும். அதே நேரத்தில், முறையான தூக்கத்திற்கு கல்லீரலை பாதுகாப்பதும் மிக முக்கியமாகும்

பலருக்கு எழும் சந்தேகமாவது, தூக்கத்தில் கனவு வந்தால் நல்லதா? கெட்டதா? உண்மையில், கனவு வராத தூக்கம்தான் மிகவும் நல்லது, பகலில் ஏற்பட்ட வேலை பளுவால் களைந்து போன  புத்தியையும், மனதையும் ஒழுங்காக அடுக்கி வைக்காத பொழுதுதான் கனவுகள் வரும். ஆகையால், புத்தியையும், மனதையும் சாந்தப்படுத்தி விட்டு தூங்கச் சென்றால்தான் நல்ல ஆழ்ந்த நிமமதியான தூக்கம் கிடைக்கும். கூடுமானவரை, தூக்க மாத்திரையை சிறிது சிறிதாக குறைப்பது நல்லதாகும், ஏனென்றால் தூக்க மாத்திரை மூலம் நமக்கு கிடைப்பது தூக்கம் அல்ல, அது ஒரு விதமான மயக்கம். தூக்கத்துக்கும், மயக்கதிற்க்கும் நிறைய வேறுபாடு உள்ளது. .மயக்கத்தில் நடு மனமும், ஆழ்மனமும் இயங்கிக் கொண்டேயிருக்கும், இதனால், நம் உள்ளுறுப்புகளும், மூளை, நரம்பு மண்டலமும், தசைகள் மற்றும் தசை நார்களும் தளர்ச்சி அடையாமல் இயங்கிக் கொண்டே இருக்கும், உடல் அளவிலும், மனதளவிலும், புத்துணர்ச்சி ஏற்பட வாய்ப்பில்லை

அடுத்தது, மிக முக்கியமானது, அலாரம் (ALARM) வைத்துக் கொண்டு எழுந்திரிக்ககூடாது  என்பதாகும். ஏனென்றால், தூங்கும்போது BP நார்மல் அக இருக்கும். அனைத்து உறுப்புகளுக்கும் இரத்தம் ஒரே சீராக குறைந்த அளவில் சென்றுக் கொண்டிருக்கும். ஏனென்றால், உடல், புத்தி, மனது ஆகியவற்றிற்கு அப்பொழுது வேலை இல்லை. ஆனால், அலாரம் அடிக்கும் போது நாம் அலறி அடித்துக் கொண்டு உடனே எழுந்தரிக்க முயலுவோம். அப்போது, நம்முடைய BP எந்தவித முன்னரிவிப்பின்றி எந்த கட்டுபாட்டிலாமல் அதிகபடியான இரத்தம்  இதயத்தில் PUMP செய்யப்பாட்டு மூளை, நரம்பு மண்டலம் மற்றும் அனைத்து உறுப்புகளுக்கும் வேகமாக பாய்ந்து செல்லும். இது முற்றிலும் இயற்க்கைக்கு மாறான செயலாகும். இதனால் இதயம் பலமாக பாதிக்கப்படும். மேலும் எந்தவித முன்னரிவிப்பின்றி  மூளைக்கு செல்லும் அதிகபடியா இரத்தம் போன்றவைகளால் பாதிப்பு ஏற்படும். இதையே தினந்தோறும்  செய்தால் (ALARM  வைத்து எழுந்தால்) இதயகோளாறு, மூளை செயல் இழத்தல் ஏற்பட வாய்ப்புண்டு. 

இப்பொழுது, ஒன்று யோசித்து பார்க்க வேண்டும், நாம் காலை 5 மணிக்கு அலாரம் வைத்து இரவு தூங்க செல்கிறோம், ஆனால், ஒரு வேலை அலாரம் அடிக்காமல் 7 மணிக்குதான் தானாக எழுந்திரிக்கிறோம் என்று வைத்துக் கொண்டால், இதற்கு என்ன பொருள்? இந்த 2 மணி நேர அதிகப்படியான தூக்கத்தைத் தான் நாம் தினந்தோரம் இழந்துகொண்டிரிக்கிறோம் என்று தானே பொருள் கொள்ள வேண்டும். இதையே ஒரு 5 வருடம் தொடர்ந்து செய்தால் கணக்கு போட்டு பாருங்கள் (2 HRS X 365 DAYS X 5 YRS = TOTAL 3500 HRS), எவ்வளவு தூக்கத்தை நாம் இழந்திரிக்கிறோம் நம் வாழ்நாளில்!!!! இதனால் என்ன என்ன  பின்விளைவுகளை பிற்காலத்தில் நாம் அனுபவிக்க நேரிடும் என்று??

உட்கார்ந்து தூங்குவதனால் ஏற்படும் நன்மைகள் :
இரவில் சரியாக தூக்கம் வராதவர்களுக்கு ஒரு சிறப்பு ஆலோசனை. அதாவது முதலில் கட்டிலிலோ அல்லது தரையிலோ, கால்களை நீட்டி, தளர்வாக, சுவரில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டு எதைப் பற்றியும் யோசிக்காமல் ஒரு 15 அல்லது 20 நிமிடம் இருக்க வேண்டும். சிறிது நேரத்தில் தூக்கம் வரும் போல் இருந்தால் மட்டும், நீங்கள் எப்பொழுதும் போல் படுத்துக் கொள்ளலாம். அதாவது, படுக்கை அறைக்கு சென்றவுடனே  படுக்காமல், சிறிது நேரம் கண்ணை மூடி உட்கார்ந்து, தூக்கம் வரும் பொழுது தூங்க வேண்டும். இதைப் போல் தினமும் தொடர்ச்சியாக செய்யம் போது சிறப்பான பலனை தரும். முதல் ஒரு வாரத்திற்கு மிகவும் கடினமாக தோன்றும். பிறகு, தானாக பழகிவிடும். முதலில் உட்கார்ந்து தூங்கி  பிறகு படுத்து தூங்கினால் உடம்பு, புத்தி, மனது மூன்றும் ஒரு சேர RECHARGE ஆகும், சில பேருக்கு, பேருந்தில், காரில் போகும்போது உட்கார்ந்துக் கொண்டு நன்றாக தூங்குவார்கள், இந்த தூக்கத்தினால் கிடைக்கும் புத்துணர்ச்சி அவர்களுக்கு இரவில் தூங்கினாலும் கிடைக்காது.

இன்னும் அதிசயத்தக்க உண்மையாதெனில், உட்கார்ந்துக் கொண்டே தூங்குவதினால், முடிகொட்டுவது குறையும், ஞாபகச்சக்தி அதிகரிக்கும், .பள்ளி மாணவர்களுக்கு பகலில் படித்ததை முழுமையாக ஞாபகம் வைத்துக் கொள்ள இரவில் முதலில் உட்கார்ந்து தூங்க பழக வேண்டும். தாடைகீழு ஒரு பள்ளத்தில் ஒரு எலும்பு, ஒரு வர்ம புள்ளி இருக்கு,..இதை அனுபவத்தில் நாம் நிறைய பார்த்திருப்போம். நாம் தாடையில் கை வைத்து கீழே கவுந்து தலையணை வைத்துப் படுத்துக்கொண்டே படித்திருப்போம். ஆனால், அது ஒரு 10 நிமிடம் தான் படித்திருப்போம், அதற்கு மேல் தன்னை அறியாமலேயே உறங்கி விடுவோம். ஏனென்றால், அந்த வர்ம புள்ளியில் நம்முடைய கைகள் தாடையின் கீழ் அழுத்தும்போது அந்த புள்ளி தூண்டப்பட்டு தூக்கத்தை வரவழைக்கும். இதைப்போல், உச்சந்தலையில் இடது பக்கமும், வலது பக்கமும் தடவி கொடுத்தால் உடனே தூக்கம் வரும்.(ACUPUNCTURE ல் DU 20 என்ற இடம் அல்லது வர்மத்தில் கொண்டை குழி என்பார்கள் இந்த புள்ளியைஏனென்றால், அங்கு 72 ஆயிரம் நாடி நரம்புகள் சங்கமிக்கிற இடம், இந்த இடத்தை தூண்டினாலும் நன்றாக தூக்கம் வரும்.

அடுத்து, பொதுவாக நாம் 6 X 4 அளவுள்ள கட்டிலில் மூன்று பேர் தூங்குகிறோம், இங்கே, கைகள், கால்களை நன்கு அசைத்து படுக்க முடியாதபடி படுக்கிறோம், இது தவறாகும், அதிலும், ஒருவர் கட்டிலில் ஓரமாக தூங்குகிறவருக்கு CONSCIOUS MIND முழித்துக் கொண்டே இருக்கும், நாம் தவறி விழ கூடாதென்று இதுவும் அழ்ந்த தூக்கத்தை தடைச் செய்யும். நாம் கட்டிலில் தனியாக ஒருநாள் படுக்க நேரிடும் பொழுது நீங்கள் கவனித்திரிப்பீர்கள், இரவில் படுத்த இடம் ஒன்றிருக்கும் காலையில் வேறு இடத்தில் நாம் படுத்திருப்போம், உடம்பும் புத்துனர்ச்சியுடன் இருந்திருக்கும். ஆகையால், பெரிய பரப்பளவில் (AREA) தூங்க செல்வது நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும்.

அடுத்து, ஜோதிடரீதியாக எவ்வாறு தூக்கத்தை பொருத்திப் பார்ப்பது. இங்கே, தூக்கத்தின் அருமை, பெருமைகளை பார்த்தோம். ஆகையால், தூக்கத்தை ஒரே ஒரு கிரகத்தை மட்டும் பொருத்தி பார்த்தல் அது சரியாக வராது என்பது அடியேனுடைய கருத்தாகும். ஆகையால், தூக்கத்தை,....
பிறந்தது முதல் 15 வயது வரை உள்ள தூக்கத்திற்கு  – மனதில் எந்தவித குழப்பமும் இன்றி, படிப்பு, விளையாட்டு போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, பெற்றோறிடத்தில் அன்பு செலுத்திக் கொண்டு சந்தோஷமாக கள்ள கபடமற்ற தூக்கத்திற்க்கு குரு கிரகத்தை அடியேன் இங்கு பொருத்திப் பார்க்கிறேன்.

16 முதல் 60 வயது வரை உள்ள தூக்கத்திற்கு –- இனவிருத்தி சுரப்பிகள் விருத்தியாகி அதனால் உந்தப்பட்டு மனதில் இனம்புரியா சந்தோஷத்தினால் ஒருவித மயக்க நிலையோடு தூக்கத்தை அணுகவதினாலேயும், திருமணதிற்கு பிறகு ஏற்படும் தாம்பத்திய சுகத்தினால் உண்டாகும் இன்பமான, களைப்பான, மகிழ்ச்சியான, சுகமான தூக்கத்திற்க்கு சுக்கிரன் கிரகத்தை அடியேன் இங்கு பொருத்திப் பார்க்கிறேன்.

61 வயதிலிருந்து கடைசிக் காலம் வரை உள்ள தூக்கத்திற்கு – கடமைகள் முழுவதும் நிறைவேற்றி திருப்தியான மனநிறைவுடன், பொறுப்புகள்  ஓரளவிற்கு குறைந்து, அசதியுற்று, நோய்களாளும், கழிவு உபாதைகளால் உடலளவில் மற்றும் மனதளவில் சிறிது தளர்ந்தும், திருப்தியற்ற அதே நேரத்தில் குறைவான தூக்கத்திற்கு, சனி கிரகத்தை அடியேன் இங்கு பொருத்திப் பார்க்கிறேன்


லக்னத்தின் காரகமான இயக்குதல், விழிப்புணர்வு, செயல்திறன் ஆகியவற்றிற்க்கு எதிர்மறையான, மேற்க்கூரிய எல்லா வேலையையும் முடித்து படுக்கைக்கு செல்லும் தூக்கதிற்க்கான பாவமாக 12ம் பாவத்தை அடியேன் இங்கு இணைத்து இக்கட்டுரையை முடிக்கிறேன்.

No comments:

Post a Comment