Tuesday 8 March 2016

நான் என் கல்லீரலை முறையாக பராமரிக்கிறேனா? ஒவ்வொருத்தரும் நமக்குள்ளேயே கேட்டுப் பார்க்க வேண்டும்?



உடலிலுள்ள உள் உறுப்புகளிலேயே மிக பெரியது கல்லீரல் தான் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், கல்லீரல் நம் உடலில் எப்பேர்ப்பட்ட வேலையை செய்கிறது என்பது பெரும்பான்மையோருக்கு தெரியாத விஷயத்தை கூறவே இங்கு முற்படுகிறேன். இப்போது உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம்??? அணைத்து விதமான விவரங்களையும் விரல் நுனியில், அதாவது GOOGLE SEARCH ல் தெரிந்து விடலாமே என்று!! ஆனால், இந்த கட்டுரையை  நீங்கள் வாசித்த பிறகு உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வீர்கள் என்பது அடியேனுக்கு எள்ளளவும் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது? ஏனென்றால் நீங்கள் இதுவரை கேட்டிராத, அறிந்திராத விஷயங்களேயே உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன் !!!

கல்லீரல் நம் உடலில் எவ்வாறு இயங்குகிறது?
1)     இரத்தத்தை சுத்திகரித்தல்
2)     கண் பார்வைக்கு நேரடியாக சக்தி அளித்தல்
3)     தசை நார்களுக்கு சக்தி அளித்தல்
4)     மூளைக்கும், நரம்பு மண்டலத்துக்குமான நேரடி தொடர்பை பராமரித்தல்
5)    மிக அதிக கொழுப்பு சத்துள்ள உணவை பித்த நீரின் உதவியோடு கரைத்து ஜீரண உறுப்புகளுக்கு சக்தி அளித்தல்.
6)     உடலிலுள்ள அணைத்து விதமான கழிவுகளை வெளியேற்றுதல் – வீரியம் வாய்ந்த ரசாயன கழிவு உட்பட....... 
7) உடலில் உள்ள விஷத்தை முறிப்பது  -– அணைத்து விதமான விஷங்களும் இதில் அடக்கம்  (கொடிய பாம்பின் விஷம் உட்பட).......நம்ப முடிகிறதா?
8)      பெண்களின் மாத விலக்கில் பெரும் பங்கு வகிப்பது 

கல்லீரல் உணவை ஜீரணிக்கக் கூடிய உறுப்பு என்பது பொதுவாக நம் அனைவருக்கும் தெரியும்.  அது,  உணவிலுள்ள கொழுப்புச் சத்துக்களை ஜீரணித்து கிரகிக்கவும் செய்கிறது. மேலும், நமது உடல் சக்தியையும், உஷ்ணத்தையும் தயாரிக்கும் வேலையை செய்கிறது. எனவே, நமது உடலுக்கு குளிர்விக்கும் அமைப்பு ஒன்று தேவைப்படுகிறது. அத்தகைய அமைப்பு தான் கல்லீரல். பித்தப் பையில் பித்த நீர் சேமித்து வைக்கப்படுகிறது. தேவைப்படும் சமயங்களில் இது முன் சிறுகுடலில் உள்ள அமிலத்தன்மையுள்ள பாதி திரவ நிலையில் உள்ள உணவை காரத்தன்மை ஆக்குவதற்கு முன் சிறுகுடலுக்குச் செலுத்தப்படுகிறது. கல்லீரல் சரியான முறையில் வேலை செய்யாவிடில் பித்தப்பையிலிருந்து செல்லும் கல்லீரலின் அளவு குறையும் போது செரிமான அமைப்பில் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. எனவே, உடலில் வெப்ப அளவு அதிகரிக்கிறது. மற்றொரு வகையில் செரிமான அமைப்பில் வாயுத் தொல்லை, உணவுக் குழல், இரைப்பையில் எரிச்சல், பற்கள் ஈறுகளில் பலவீனம் ஏற்படுகிறது. இதன் காரணமாக குடல் மற்றும் வாய் பகுதிகளில் புண் (ULCER) ஏற்படுகிறது.  மேலும், உடலில் ஏற்படும் அதிக வெப்பத்தின் காரணமாக ஜலதோஷம், கண்களில் தொந்தரவு, மூக்குக் கண்ணாடி அணியும் தேவை போன்றவை ஏற்படுகிறது. மேலும், ஆண்களுக்கு சீக்கிரமாக விந்து வெளியேறுதல், மற்றும் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகிறது. தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், முடி உதிர்தல் ஏற்படுகிறது. மஞ்சள் காமாலை ஏற்பட பெரிதும் காரணமாகிறது.  இவ்வாறான, காரணங்களால் முன்கோபம் ஏற்படுகிறது.

கல்லீரல் சரியாக செயல்படுவது மிக அவசியம். ஏனெனில், இது உடலின் பெரிய சுரப்பியாகும். மேலும், இது சர்க்கரையை க்ளைக்கோஜனாக (GLYCOGEN) மாற்றி சேமிக்கிறது. மேலும், கல்லீரல் தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றுகிறது. எனவே, உடலின் பல்வேறு உறுப்புகள் சரியாக செயல்பட, கல்லீரலின் செயல்பாடு மிக அவசியம்.  வாழ்க்கையின் தரம் கல்லீரலின் செயல்பாட்டை பொறுத்து அமைகிறது. இதன் வேலை அதிக உடல் வெப்பத்தால் பாதிக்கப்படுகிறது.  கல்லீரல் செயல்பாட்டு திறன் குறைவதாலும், அகச்சிவப்பு கதிர்கள், வெப்பத்தை அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு மருந்துகள், போதைப் பொருள்கள் பயன்படுத்துதல் போன்றவற்றால் கல்லீரல் பாதிப்படைகிறது. அட்ரீனல் சுரப்பியால் கல்லீரல் வேலை செய்வது கட்டுபடுத்தப்படுகிறது

அடுத்து கல்லீரலின் இன்றியமையாத மற்றும் பெரும்பான்மையோருக்கு  தெரிந்திராத / அறிந்திராத பணியானது ---, உடல் முழுவதும் பிராண சக்தி சீராகப் பரவுவதை நிர்வகித்தல், இவ்வகையில் அது மற்ற உறுப்புகள் அனைத்தையும் ஆள்கிறது. கல்லீரல் ஒழுங்காகப் பணி செய்தால்தான், மற்ற உறுப்புகளின் பிராண சக்தி அதனதன் திசையில் இயங்க முடியும். பிராண சக்தி  சீராகப் பரவுவது உணர்ச்சிரீதியாக சந்தோஷமான வாழ்க்கைக்கும் அத்தியாவசியமானது. கல்லீரலின் அடுத்த முக்கியமான பணி, உடலுழைப்பின்போது தேவையான பகுதிகளுக்கு ரத்தத்தை அனுப்பிவைத்து, தசைகளுக்கும் தசை நார்களுக்கும் ஊட்டமளிப்பது, கல்லீரலின் இந்த பணி ஒழுங்காக நடந்தால்தால்தான், நாம் சோர்வில்லாமல் உடல் உழைப்பில் ஈடு பட முடியும். இல்லையெனில், நாம் எளிதில் சோர்ந்துவிடுவோம், அல்லது தசைகள், எப்போதும் இறுக்கமாக இருக்கும். தசைகளை இயக்கும் கல்லீரல்தான், பெண்கள் சிக்கலில்லாமல் பிரசவிக்கவும், ஆண் உறுப்பில் விறைப்புதன்மை உண்டாகவும் பொறுப்பு வகிக்கிறது. கண்களும், நகங்களும், கல்லீரலோடு தொடர்புயுடையவை. பெரும்பான கண்பார்வைக் கோளாறுகளும், விரல் நகங்களின் கோளாறுகளும் கல்லீரலின் குறைபாடுகளே! கல்லீரலில் போதுமான ரத்தம் இருந்தால்தான் கால்களால் நடக்க முடியும். கைகளால் பொருள்களை இறுகப்பற்ற முடியும். கண்கள் அணைத்து நிறங்களையும் அடையாளம் காணும்.

மேலும், இரவு மணி முதல் 3 மணி வரை..... கல்லீரலின் நேரம், இந்த நேரத்தில் நீங்கள் உட்கார்ந்திருக்கவோ, விழித்திருக்கவோ கூடாது. கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தைக் கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்தப் பணியை நீங்கள் பாதித்தால், மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவார்கள். அது மட்டுமல்ல வாத நோய்களுக்கும் அது வழிவகுக்கும்.

மேலும், உடலின் நச்சுத்தன்மையை உட்கிரகித்து, தன்வயப்படுத்தி உடலை செழுமையாக வைத்திருப்பது கல்லீரலாகும். எந்த உறுப்புகளுக்கும் இல்லாத சிறப்பு  யாதேனில், மரத்தை போலவே கல்லீரலும் அதன் ஒரு பகுதியை வெட்டினாலும் வளரும் தன்மையுடையது. கல்லீரலின் பணிகளை   செழுமையாக செயல்படுத்த பித்தப்பை என்ற உறுப்பு மிகவும் துணைபுரிகிறது.

இன்னொரு, பிரமிக்கத்தக்க, உண்மையான விஷயம்..........அதாவது, ஒருவர் தன் கல்லீரலை முழு திறத்துடன் முறையாக பாதுக்காக்கப்பட்டால் பாம்பின் விஷத்தைக்கூட முறிக்கும் ஆற்றல் / வல்லமை வாய்ந்தது நம்முடைய கல்லீரல் என்பது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.,   

இவ்வளவு சிறப்பு வாய்ந்த கல்லீரல் நோய்வாய்ப்படும்போது, உடல் தசைகள் அனைத்தும் தளர்ந்து விடுகின்றன. வெளிப்புற உடல் உறுப்புக்களின் தசைகளாக இருந்தாலும் சரி, அனைத்துமே செயலிழந்த நிலையாகி விடுகின்றன. அதாவது உடல் வெளியுறுப்புக்களான கை, கால்கள், முதுகு, நெஞ்சு தசை நார்கள் பலவீனமடைகின்றன. உடல் உள்ளுறுபுக்களான வயிறு, சிறுநீரகங்கள், இதயம், கர்ப்பப் பை, சிறுகுடல், பெருங்குடல், மண்ணீரல் ஆகிய அனைத்தின் தசை நார்களும் சோர்வுற்ற நிலையை அடைகின்றன.

தசை நார்கள் தன் உறுதியை இழக்கும் போது, அனைத்தின் இயக்கமும் ஒரு சேர பாதிப்படைகிறது. இந்த நிலையை தான் கல்லீரலில் நோய்கள் உருவாகும்போது, நாம் பார்க்கிறோம். உதாரணமாக, நாம் அனைவரும் அறிந்திருக்கக்கூடிய ஒரு கல்லீரல் நோய், மஞ்சள் காமாலை ஆகும். இந்த நோயின் போது, மேற்சொன்ன ஒவ்வொரு உறுப்பின் விளைவையும், நாம் பார்க்க முடியும். உடல் மொத்தமாக சோர்வடைந்து விடுகின்றது. எந்த ஒரு வேளையிலும் ஈடுபட முடியாது. உடல் தசைநார்கள் அனைத்தும் வலிக்க ஆரம்பிக்கும். வலி இருக்கும் இடமெல்லாம் வெப்ப சக்தி அதிகமாக கொண்டிருப்பதன் காரணமாக பொதுவாக உடல் உஷ்ணமாக, ஜுரம் என்ற நிலைமையை அடைந்திருக்கும்.

மஞ்சள் காமாலையின்  போது, அதாவது கல்லீரலில் ஒரு நோய் உண்டாகும்போது, உள்ளுருப்புக்களில் தசை நார்களும் சோர்வடைந்து விடுகின்றபடியால் உள்ளுறுப்புக்கள் ஒவ்வொன்றிலும் ஜுரம் என்ற கெட்ட வெப்பச் சக்தி நிலைக்கொண்டு அவ்வுறுபுக்களை இயங்க விடாமல் தடுக்கிறது.

கல்லீரலில் ஏற்பாடும் மற்றொரு நோய், பித்தப்பை கற்கள்........இது கல்லீரலால் கிரகிக்கப்படும் ரசாயன நச்சுப் பொருட்கள் பித்தப்பையில் தான் அடைக்கப்பட்டு அவை உடலில் கலந்து விடாமல் பாதுகாக்கப்படுகிறது. முடிந்தவரை நச்சுக்களை தன்வயப்படுத்தி கல்லீரலின் துணையோடு அவற்றை அழித்து விடுகிறது பித்தப்பை. அதிலும், மோசமான நச்சுப் பொருட்களை கற்களாக மாற்றி உள்ளேயே வைக்கிறது. போதிய எதிர்ப்பு சக்தி வளர்ச்சிக்கு பிறகு இந்த பித்தப்பை கற்கள் கரைக்கப்பட்டு அழிக்கப்பட்டு விடும்.

அடுத்து கல்லீரல் பாதிப்பால் மனதிலிருந்து இருந்து வெளிப்படுகிற நோய் உணர்ச்சி, கோபம் மட்டுமல்ல.... எரிச்சல், சீற்றம், அநீதி இழைக்கப்படும் போது உண்டாகும் ஆத்திரம், வெறுப்பு உணர்ச்சி, கசப்பு உணர்ச்சி, அடக்கி வைக்கப்பட்ட கோபத்தினால் உண்டாகும் மனச்சோர்வு அனைத்துமே கல்லீரலின் உணர்ச்சிகளின்தான். இந்த உணர்ச்சிகள் அதிகமானாலோ தொடர்ந்து நீடித்தாலோ கல்லீரலைப் பாதித்து அதன் பிராண சக்தியை மேலே எழும்பச் செய்து தலைவலி, காதில் இரைச்சல், கிறுகிறுப்பு, சிவந்த முகம், தாகம், நாக்கில் எப்போதும் இருக்கும் கசப்பு உணர்ச்சி ஆகியவற்றை உண்டாக்கும்.

கல்லீரல் சம்பந்தமான எந்தவொரு நோயும் குணப்படுத்த அந்த உறுப்புக்கு ஊட்டமாகவும், உணவாகவும் அமையக்கூடிய உணவு புளிப்புச் சுவையாகும். அந்த புளிப்புச் சுவையை ஜீரணிக்க, கல்லீரல் முழுமையாக ஜீரணிக்கும் சக்திக் கொண்டதாக இருக்க வேண்டும். எனவே, கல்லீரல் நோயின் போது, புளிப்பு ருசியை உணவில் குறைத்து விடுங்கள். புளிப்புச் சுவையைக் கொண்டுள்ள உணவு வகைகள் யாதெனில்; உணவில் சேர்க்கக்கூடிய புளி, ரசம், குழம்பு, ஊறுகாய், எலுமிச்சை, வினிகர், புளிக்கும் பழங்கள் போன்றவற்றையாகும். இவற்றை எந்த அளவு நீங்கள் உணவில் குறைத்துக் கொள்கிறீற்களோ அல்லது முற்றீலுமாக தவீர்த்துக் கொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு மேலே சொல்லப்பட்ட அனைத்து கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களும் விரைவில் குணமாகும்.

பற்களில் வலியோ, காதுகளில், தாடைகளில் வலியோ ஏற்படுமானால் உடனே புளிப்புச் சுவையை நிறுத்தி விடுங்கள். ஒரேநாளில் வலிகள் குறைய ஆரம்பிப்பதை கண்கூடாகப் பார்ப்பீர்கள்.

பால், தயிர், மோர் மற்றும் பால் சம்பந்தமான எதுவாக இருந்தாலும் சரி, அவற்றை நீங்கள் இவ்வகை வலிகளின்போது, கண்டிப்பாகத் தவீர்த்து விடுங்கள். ஏனெனில், பால் சம்பந்தமான டீ, காபி போன்றவை வயிற்றில் இறங்கியதும் புளித்துப் போய்விடும். எனவே, வலிகளை அதிகரித்து விடும். மேற்ச்சொன்ன அனைத்து நோய்களிலிருந்தும் உங்களை குணப்படுத்திக்  கொள்ள இந்த ஒரு வழியை நீங்கள் கடைபிடித்து, கல்லீரல் சம்பந்தமான அனைத்து நோய்களிலிருந்தும் விடுபடுங்கள்.

அடுத்து ஜோதிடரீதியாக இணைத்துப் பார்த்தால் --- குரு கிரகமே கல்லீரல் உறுப்புக்கு மிக பொருந்தி வருகிறது.. கல்லீரல் உடலிலுள்ள உள் உறுப்புகளிலேயே பெரிய உறுப்பை போல் – சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களிலேயே மிக பெரிய கிரகம் குரு’வாகும் பெரிய விஷயங்களுக்கு குருவே காரகர் என்பதால் உடலில் அதிக பகுதியை கொண்ட வயீற்றுப் பகுதிக்கும், வயிற்றில் உள்ள கல்லீரலுக்கும் உடலை பெரியதாக்கும் கொழுப்புச் சத்திற்கும் குருவே காரகர் ஆகின்றார்.

கல்லீரலில் நோய் இருப்பின் ஒருவர் உயிர் வாழ்வதில் எப்படி அர்த்த மற்றதாகிறதோ அதைப்போல் ஒருவரின் ஜாதகத்தில் குரு’வின் கொடுப்பினையின்றி சமுதாயத்தில் வாழ்வதில் எந்த சிறப்புமில்லை, மரியாதையுமில்லை. ஏனென்றால், தெய்வ அருள் இன்றி இவ்வுலகில் ஒரு உயிரினமும் உருவாக முடியாது, அந்த தெய்வ அருளுக்கு முழுக்க முழுக்க சொந்தக்காரர் குருவாகும்.  அதைப்போல் ஒருவரது வாழ்க்கையில் பிடிப்பும், அர்த்தமுள்ளவையாக இருக்க வேண்டும் என்றால் புத்திர பாக்கியம் என்பது மிக மிக இன்றியமையானதாகும். புற வாழ்க்கையில் ஒருவர் எவ்வளவு துன்பம் அனுபவிக்க நேர்ந்தாலும் தன் குழந்தையின் சிரிப்பையோ, முகத்தையோ ஒரு முறை, ஒரேயொரு முறை பார்த்தால் போதும், புயல் போல் வந்த துன்பம் பனி போல் நீங்கிவிடும். அப்படிப்பட்ட அற்புதமான சக்தியை உருவாக்க வல்லமை படைத்த கிரகம் குரு’வாகும்.

மூளை மற்றும் நரம்புகளின் இயக்கத்திற்கு கல்லீரல் பங்கு மிக இன்றியமையாதது. அவைகளின் துணையின்றி உடல் இயங்குவதில் எந்தவித அர்த்தமில்லையோ, அதேபோல் .ஒருவருக்கு வாழ்க்கையில் நேர்மை, ஒழுக்கம், சாந்தம், பண்பாடு, கட்டுப்பாடு, மற்றவரை மதித்தல், தெய்வ நம்பிக்கை, தர்ம சிந்தனை ஆகிய நற்பண்புகள் இன்றி  உயிர் வாழ்வதிலும் சிறப்பில்லை. இத்தகைய உயரிய பண்புகளுக்கு காரகர் குரு’வேயாகும்.     


அடுத்து, 10ம் பாவம், கல்லீரல் உறுப்புக்கு மிகச் சரியாக பொருந்துகிறது.  ஒருவருடைய பொறுப்புணர்வு, கடமை, தொழில், தொழில் மூலமாக கிடைக்கும் அந்தஸ்து, பெரிய பதவி, அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் வெகுமதி போன்றவற்றால் அந்த பாவத்திற்கே உயரிய சமுக அந்தஸ்தினையும், சிறப்புத் தன்மையையும் பெற்று தந்து அந்த பாவத்திற்க்கே சிறப்புடையதாகிறது. அதைப்போல், கல்லீரலின் பங்கு நமது உடலுக்கு எவ்வளவு இன்றியமையாதது என்று மேலே தெள்ளதெளிவாக குறிப்பிட்டபடியால் 10ம் பாவமும், கல்லீரலும் ஒரே கோட்டின்கிழ் வருவதில் எவ்வித ஆச்சரியமில்லை என்று கூறி இக்கட்டுரையை முடிக்கிறேன்.

No comments:

Post a Comment