Thursday 18 February 2016

தோல் நோய் சம்பந்தமான பிரச்சனையா? சனி கிரகத்தையும் + 12ம் பாவத்தையும் பார்?


பெரும்பான்மையோருக்கு தோலில் அரிப்பு, எரிச்சல், புண்கள் என்றால் ஏதோ தோல் சம்பந்தமான வியாதி என்று நினைகின்றனர்.  ஆனால், இங்கு தோலில் பிரச்சனை இல்லை, மாறாக உடலில் உள்ள கழிவுகள் உடலிலேயே தேங்கி முழுமையாக வெளியேறாமையே உண்மையான காரணம். 

சரி, கழிவுகள் ஏன் தேங்குகிறது?? உடலைவிட்டு வெளியேறாமைக்கு என்ன காரணம்??  நாம் என்ன தவறு செய்து கொண்டிருக்கிறோம்?? சிந்தித்தால் கிடைக்கும் பதில் -- நாம் அன்றாடம் மேற்கொள்ளும் இயற்கை விதிமீறல்களால் கழிவுகள் உடலை விட்டு வெளியேற மறுக்கின்றன. அப்படி என்னதான் செய்கின்றோம் நாம்??
பொதுவாகவே, உடலில் உள்ள கழிவுகள் மலம் மூலமாகவோ, சிறுநீர் மூலமாகவோ அல்லது சளியின் மூலமாகவோ வெளியேறுகின்றன. ஆனால், நாம் அன்றாடம் மேற்கொள்ளும் இயற்கை விதிமீறல்களால் இவற்றில் தடை ஏற்படுகின்றன. என்ன விதிமீறல்கள்??

முறையற்ற உணவு பழக்கம்
தாகமிருக்கும்போது – நீர் அருந்தாமலிருப்பது
தாகமில்லாதிருக்கும்போது – நீர் அருந்துவது
பசியிருக்கும்போது  -- சாப்பிடாமல்  இருப்பது
பசியில்லாதிருக்கும்போது  -- சாப்பிடுவது
தூக்கம் வரும்போது -- விழித்திருப்பது
ஒய்வு தேவையின்போது – உழைப்பது
அளவுக்கு அதிகமாக உழைப்பது
நல்ல உணர்வுகளுக்கு மாறாக நடப்பது.

மேற்கண்ட விதிமீறல்களால் கழிவுகள் தேங்குகிறது, இருப்பினும் கழிவுகள் உடலைவிட்டு வெளியேற துடிக்கின்றன. இது போதாதென்று நாம் எடுத்துகொள்ளும் மருந்துகளாலும் சிக்கல் பெரிதாகின்றது. இப்பொழுது நம் உடம்பு காய்ச்சல் என்னும் அஸ்திரத்தை கையில் எடுத்துக்கொண்டு அதன் மூலம் கழிவுகளை வெளியேற்ற பாடாபடுகின்றது. சளைக்காமல் நாமும் மருந்தை உட்கொண்டு மேலும் காய்ச்சலை தடுத்துவிடுகின்றோம்
.
இப்பொழுதுதான், நம் உடம்பு அனைத்துவிதமான கழிவுகளையும் வேர்வையின் மூலம் வெளியேற்றுகின்றது. அதாவது, சரியான உண்மையை கூறவேன்டும்மென்றால், வேர்வையின் மூலமாக நம்முடைய மலமும், சிறுநீரும் தோல் வழியாக வெளியேறுகின்றது. இதனால்தான்,  தோலில் அரிப்பு, எரிச்சல், புண்கள் உண்டாகின்றன.

இங்கே, நாம் புரிந்து கொள்ள வேண்டியது, தோலில் ஏற்படும் பிரச்னையை சரிசெய்ய SKIN SPECIALIST களையோ OILMENT, CREAM போன்ற செயற்கை உபகரனங்களையோ உபயோகிக்க  முற்படக்கூடாது. மாறாக, கழிவுகள் உடலைவிட்டு இயற்கையான முறையில் வெளியேற அனுமதிக்க வேண்டும்,

இங்கு உடல் நல சீர்கேட்டிற்கு, ஜோதிடத்தையும் இணைத்து பார்க்க வேண்டும். அதன் மூலம் மட்டும் தான் நிரந்திர தீர்வு கிடைக்கும்.
சனி கிரகமும், 12ம் பாவமும்  உடலில் உள்ள கழிவுகளுக்கு காரகமாகும்.  சனியும், 12ம் பாவமும் நம் ஜாதகத்தில் வலு குறைந்திருந்தால் மேற்கூறிய தோல் சம்பந்தமான நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட நேரிடும். இதனுடைய தசா, புத்தி, அந்தரம், சூட்சமம் ஆகிய காலங்களில் நாம் இந்நோய்களை அனுபவிக்க நேரிடும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

இங்கே, நம் உயர் கணித சார ஜோதிட அடிப்படையில் துல்லியமாக நோய்களையும் அதற்கு சம்பந்தமான கிரகங்களையும் + பாவங்களையும்

கண்டறிந்து அதற்கு தக்க வகையில் ஆலோசனையும், மருத்துவமும், பார்க்கப்படும் என்பதை கூறி இக்கட்டுரையை முடிக்கிறேன்.


4 comments:

  1. சார் கலக்கல்,
    பாராட்ட வார்த்தை இல்லை

    ReplyDelete
    Replies
    1. Super sir Saturn if connected to 2 8 6 12 skin issues I just finished Saturn anthara 28 .. 20 .. 28 I had same issues in skin

      Delete
  2. சார் கலக்கல்,
    பாராட்ட வார்த்தை இல்லை

    ReplyDelete
  3. மிகவும் அருமை.... எட்டு மற்றும் பன்னிரெண்டாம் பாவ உபநட்சத்திரம் சனியாக இருந்து அது 6, 8, 12 ம பாவங்களை காட்டினால் அவர்களுக்கு கண்டிப்பாக தோல்]
    மற்றும் கழிவு வெளியேற்றம் போன்றவற்றில் பிரச்சனை ஏற்படும்...

    தொடர்ந்து தாங்கள் கட்டுரைகள் எழுத வாழ்த்துக்கள்....

    ReplyDelete