Wednesday 17 February 2016

நல்ல நேரம், காலம் பார்த்து ஒரு செயலை செய்வது சரியா?

பொதுவாக, ஒரு செயலை நாம் நல்ல நேரம், காலம் பார்த்து தான் துவங்குகின்றோம். அதாவது, சந்திராஷ்டமி, ராகு காலம், எமகண்டம், கரி நாள், மரண யோகம், அஷ்டமி, நவமி என்று இன்னும் நிறைய சொல்லலாம். இவற்றை பஞ்ஜாங்கத்திலோ அல்லது காலண்டரின் துணைக்கொண்டு மேற்கூறீயவைகள் வராத பட்சத்தில் சுபகாரியங்கள் செய்வோம். இப்படி பார்த்து பார்த்து செய்வதால் மட்டும் எல்லா நல்ல காரியமும் வெற்றிகரமாக முடிந்ததா என்றால் அதற்கு பெரும்பான்மையோர்களின் பதில் வெறும் கேள்விக்குறியே??? ஏனென்றால், சிலருக்கு வெற்றியும், சிலருக்கு தோல்வியும் ஏற்பட்டிருக்கும். இன்னும் சிலருக்கு ஒரு கேள்வியானது  மனதில் எழும், இது எந்த அளவுக்கு உண்மை என்று?
இங்கே, நாம் குறிப்பிடுவது யாதெனில், நல்ல நேரம் பார்த்துதான் எந்த ஒரு செயலையும் துவங்கவேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை, ஆனால் பார்க்கிற முறையில் தான் தவறு என்று தாழ்மையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இப்பொழுது நடைமுறையில் பார்க்கும் முறைகள் அனைத்தும் பொதுத்தன்மையானது. உதாரணமாக, ஒரு 20 அடி தூரத்தில் நின்று எதிரில் உள்ள பெரிய WHITE BOARD இல் எங்கு வேண்டுமானால் சுடலாம் என்பது எவ்வளவு சுலபாமானதோ அதைப்போல தான் நடைமுறையில் நாம் பின்பற்றும் நல்ல காலம், நேரம் பார்த்து செயலை செய்வதாகும். இது பொதுதன்மையாதலால் அனைவருக்கும் பொருந்தாது. 

நாம் கூற முற்படும் முறையானது.... அதே பெரிய WHITE BOARD இல் நடுபகுதியில் CENTRE CIRCLE லில் உள்ள  CENTRE POINT ஐ நோக்கி மிக துல்லியமாக சுடுவதாகும். இவ்வளவு துல்லியமாக பார்த்து நல்ல நேரம் குறிக்கும் போது இது அனைவருக்கும் பொருந்த கூடியவையாக அமையும். அதாவது தனிப்பட்ட ஒருவருடைய ஜாதகரின் லக்னத்தை வைத்து தான் தினசரி பலன், மற்றும் நல்ல நேரம் கணிக்க முடியும். அது மனிதனுக்கு மனிதன் முழுவதுமாக வேறுபடும். ஏனென்றால், மனிதன் என்பவன் தனி தன்மையானவன், அவனுடைய ஜாதகமும் தனிதன்மையானது, உலகத்தில் ஒருவருடைய ஜாதகம் அவரை தவிர வேறு எவருக்கும் பொருந்த முடியாது என்பதை ஆணித்தரமாக K.P.ADVANCED STELLAR ASTROLOGY (உயர் கணித சார ஜோதிடம்) முறை தெரிவிக்கின்றது.   ஆகையால், மேற்கூறிய முறைகளோடு நமது முறையையும் சேர்த்து  பின்பற்றினால் மட்டும் தான் 100% துல்லியமாக பலன் கூற முடியும், மற்றும் அனைத்து வித செயலிலும்  வெற்றி காண முடியும். மேற்கூறிய சந்திராஷ்டமி, ராகு காலம், எமகண்டம், கரி நாள், மரண யோகம், அஷ்டமி, நவமி என்று மட்டும் பின்பற்றுவதால் எந்த நற்பயனும் ஏற்படுவதில்லை. நேரம் தான் விரையமாகும். உங்கள் ஜாதகத்தை கணித்து நற்பலன் கூற வேண்டுமெனில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்யவும் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

No comments:

Post a Comment