Saturday 20 February 2016

பிரியாணி, பரோட்டா, மாமிசம் சாப்பிட்டு கொண்டே இருக்கலாம்? ஆனால்???



இறைவன் படைத்த இயற்கை உணவில் எந்த குறையும் இல்லை, எந்த தீங்கும் இல்லை.

நாம் எந்த உணவாக இருந்தாலும் அதில் ஏதாவது ஒரு குறையிருப்பதாக சுட்டி காட்டியிருக்கிறோம்.

பழங்கள் சாப்பிட்டால் குளிர்ச்சி, கிழங்கு வகைகள் சாப்பிட்டால் வாய்வு, இயற்கை இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை, மாமிசம், தேங்காய் சாப்பிட்டால் கெட்ட கொழுப்பு என்று நாம் கூறிக்கொண்டு இருக்கிறோம்.
இறைவன் படைத்த இயற்கை, நிச்சயம் தவறு செய்யாது. மனிதன் தான் தவறாக எடுத்துக் கொள்கிறான். மேலே குறிபிட்டுள்ள உணவுகளில் எந்த கெடுதியும் இல்லை.  ஆனால், அது உண்மையானது எப்போது என்றால் நாம் பசி உணர்வு இல்லாமல் சாப்பிடும்போது அந்த உணவுகள் குளிர்ச்சியாகவும், வாய்வாகவும், சர்க்கரையாகவும், கெட்ட கொழுப்பாகவும் மாறுகிறது.

உதாரணமாக நாம் மதியம் நல்ல பசியில் அசைவ உணவு (பிரியாணியோ, பரோட்டாவோ) எடுத்துக்கொள்கிறோம். அதுவும் நன்றாக சாபிட்டாகிவிட்டது. மறுபடியும் பசி எடுக்க 12 மணி நேரமோ அல்லது 18 மணி நேரமோ வரை ஆகிறது என்று வைத்துகொள்வோம். அதுவரை நாம் பொருத்திருப்பதில்லை, அடுத்தடுத்து வேலைக்கான உணவை பசியில்லாமல் உண்ணும் பொழுது மாமிச உணவு ஜீரணம் ஆகாமல் கெட்ட கொழுப்பாக மாறுகிறது. அதே சமயம் பசி எடுத்து உண்ணும் அசைவ உணவு நல்ல கொழுப்பாக மாறுகிறது. ஆக, நாம் தான் கெட்ட கொழுப்பை  உற்பத்தி செய்கிறோம். உணவு அல்ல.  அதாவது, நம் உடம்பை கெடுப்பது இங்கு மாமிசமோ, பிரியாணியோ, பரோட்டவோ இல்லை, மாறாக ஒரு முறை சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகாமலே அடுத்த வேலைக்கான உணவை சாப்பிட தயாராகிறோம்.

இது ஒருபுறமிருக்க, ஒருவருக்கு சாப்பிட்ட உணவு நன்றாக ஜீரணம் ஆக, அவருடைய ஜீரண உறுப்பு நன்கு வேலை செய்ய வேண்டும். அப்பொழுதுதான், அடுத்த வேலை உணவுக்கு தயாராக முடியும். 

இதையேதான் வள்ளுவர் 

       " மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது 
              அற்றது போற்றி உணின் "
என்றார்.

அதாவது, நாம் உண்ட உணவு நன்றாக செரித்து விட்டது என்று அறிந்த பிறகு மீண்டும் உண்ணுகிற பழக்கத்தை மேற்கொண்டால் இந்த உடலுக்கு மருந்து என்று ஒன்று தேவையே இல்லை என்று வலியுறுத்துவார்.

அடுத்து, ஜோதிடரீதியிலும் நாம் ஆராய்ந்து, அவருக்கு விதி கொடுப்பினை நன்றாக உள்ளதா என்று கீழ்கண்ட முறையில் பார்க்க வேண்டும்.
      
         சமைத்த உணவுக்கு --- சந்திரன் கிரகம்
         இரைப்பையில் உள்ள அமிலத்திற்கு –- கேது கிரகம்
         வயீறு, உணவு போன்றவற்றிற்கு –- 6ம் பாவம்

சாப்பிட்ட உணவு நன்கு ஜீரணம் ஆக, இரைப்பையில் உள்ள அமிலம் இங்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆகவே, சந்திரன், கேது ஆகிய கிரகங்கள் மற்றும் 6ம் பாவம் ஒருவருக்கு நன்கு வலிமையடைந்தால் ஜீரண சம்பந்தமான பிரச்சனையின்றி எந்த உணவையும் நன்கு அனுபவித்து சாப்பிடலாம்.


நாங்கள் உயர் கணித சார ஜோதிட அடிப்படையில் ஒருவரது ஜாதகத்தை துல்லியமாக ஆராய்ந்து மருத்துவ ஜோதிட விளக்கமும், முறையான மருத்துவமும் பார்க்கபடுகின்றது.  மேலும் விவரங்களுக்கு, கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்க என்று கூறி இக்கட்டுரையை முடிகின்றேன்.

1 comment:

  1. நல்ல கருத்து, இதுவரை அனைவரும் பரோட்டா, பிரியாணி தான் உடம்பில் கெட்ட கொழுப்பை உற்பத்தி செய்கிறது என்று நினைத்த பலருக்கு தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளீர்கள் நன்றி

    ReplyDelete