Thursday 25 February 2016

கருவுக்குள் உருவா?, உருவுக்குள் கருவா?

திருமூலரின் திருமந்திர வரிகள்:
 “ கருவும் உருவும் இரண்டு என்பார் அறிவிலார்
        கருவே உருவானது யாரும் அறிகிலார்
        கருவே உருவாவது யாரும் அறிந்த பின்
        கருவே உருவாய் அமர்ந்திருந்தாரே! “

கருவும், உருவும் தனித்தனியானவை அல்ல, அவை ஒன்றிலுள்ள ஒன்று என்பதையும், உருவினுடைய அகமாகவும், மையமாகவும் விளங்குவது கரு என்பதையும், உரு என்ற வடிவம் கருவை விளங்குவதற்கான வெளிப்பாடு என்பதையும் மேற்கொண்ட பாடல்கள் விளக்குகின்றன.
இக்கருத்தை நாம் மனித உடலிலிருந்தும், ஜோதிடத்தின் மூலமாகவும் உணர்ந்து கொள்ளலாம்.

மனித உடலிலிருந்து :
உடல் என்பது பார்க்ககூடியது, வெளிப்படையானது, எனவே, இது ‘உரு’ ஆகும். உரு என்பது தனியானது அல்ல என்பது நமக்கு தெரியும். அப்படியானால், உடலின் ‘கரு’ எங்கே இருக்கிறது? உடல் தனித்து இயங்க முடியாது. அதன் ஆதாரம் எதுவாக இருக்கும்? உள்ளே இருக்கும் உறுப்புக்களிலா? தசைகளிலா? இரத்தத்திலா? எலும்பிலா? இல்லை, இவற்றில் அனைத்துமே பார்க்ககூடியதாகவும் வடிவம் உடையதாகவும் இருக்கிறது. அப்படியென்றால், உடலில் உயிர் மட்டுமே மறைவானது.

‘கரு’ வின்  தன்மையோடு உயிரை ஒப்பிடுவோம்.
‘கரு’ மறைவானது, ஆம் உயிரும் மறைவானது
கருவையும் உருவையும் பிரிக்கமுடியாது, உயிரையும் உடலையும் பிரிக்க முடியாது.
உருவிற்கு கரு தான் ஆதாரம், உடலிற்கு உயிர்தான் ஆதாரம்.
வெளிப்புற வடிவமான உருவை மட்டும் பார்த்து கருவை விளங்கிக் கொள்ள  முடியாது. உடலை மட்டும் பார்த்து உயிரை உணர்ந்து கொள்ள முடியாது. ஆனால், உடலின் இயக்கம் உயிரின் இருப்பை உணர்த்தும்.
கரு இல்லாமல் உரு இல்லை. உயிர் இல்லாமல் உடல் இல்லை. உடல் இல்லாமல் உயிரைப் பார்க்கவோ, உணரவோ முடியாது.
இவ்வாறு ‘’கரு, உரு’ தத்துவத்தை மனித உடம்பிலிருந்து ஒப்பிட்டு பார்க்கலாம்.

அடுத்து ஜோதிடத்தை எவ்வாறு இனணத்துப் பார்ப்பது :
‘கரு’வை லக்னதொடும், ‘உரு’வை 2ம் பாவதோடும் ஒப்பிடலாம்.
லக்னமும் கரு’வை போன்றே முதன்மையானது. லக்னம் தான் ஒவ்வொரு பாவத்திற்க்கும் மூலாதாரம். கருவும் உடலுக்கு மூலாதாரமாகும். உடலில் கரு (உயிர்) இருக்குமிடம் மூளை, எனவே லக்னம் என்பது மூலம் (SOURCE) அதாவது உயிரையும் குறிக்கும் காரகமாகும். உடலில் உள்ள எல்லா உறுப்புகளும்  மூளையின் (கரு - உயிர்)  கட்டுபாட்டில் இயங்குவதை போல் லக்ன பாவம் பன்னிரண்டு பாவங்களின்  காரகங்களையும் தன் கட்டுபாட்டில் வைத்து ஜாதகத்தை இயக்கும்..
உரு (உடல்) நிலையற்றது – 2ம் பாவமும் நிலையற்றது. ஏனென்றால்  இதில் உள்ள உடற்ச்சக்தி, பேச்சுத் திறன், பொன், பொருள் ஆகியவற்றை தன் தேவைக்கேற்ப நாம் உருமாற்றிக் கொள்ள முடியும். உரு (உடல்) கரு’வை சார்ந்து இருப்பதுதான் அதற்கு மதிப்பு, இல்லையேல் அதற்கு பெயர் பூதஉடல்.. அதே போன்று 2ம் பாவத்தில் உள்ள அனைத்துக் கொடுப்பனைகளும் அனுபவிக்க வேண்டுமெனில் லக்ன கொடுப்பினை மிக இன்றியமையாததாகும். உரு (உடல்) 2ம் பாவத்தை போன்றே வெளிப்படையானது, காணக்கூடியது,
கருவுக்கு லக்ன புள்ளியும், உருவுக்கு 2ம் பாவ கொடுப்பனையும் சரியாக அமையபெரின் அதாவது ஒருவரின் அகம் சார்ந்த காரகங்களையும், புறம் சார்ந்த காரகங்களையும் ஒருங்கே நன்கு அமைந்து விட்டால் அவர் வாழ்வில் அருளும் பொருளும் பெற்று சிறப்புடன் வாழ்வர்.


இவ்வளவு சிறப்பு வாய்ந்த லக்ன புள்ளியை துல்லியமாக உயர் கணித சார ஜோதிட அடிப்படையில் கணித்து ஆராய்ந்து மருத்துவ ஜோதிட விளக்கமும், முறையான மருத்துவமும் பார்க்கப்படுகின்றது.  மேலும் விவரங்களுக்கு, கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்க என்று கூறி இக்கட்டுரையை முடிகின்றேன்.

2 comments:

  1. lagana and 2nd lord in each other to 3 5 9 11 things good

    if most planets r within 6 houses the lagna has greater control and can enjoy life and more particularly lagna lord and 2nd lord r within 6 houses from lagna the jathakar is supposed to enjoy good life see the house 1 to 6 2nd finance 3 rd efforts 4 house propertioes 5th happieness and health good and 6 winning the stars in 2nd house r in kalapurushas r lagnathipathi mars 5th lord sun and 4th lord moon so lagnathipathi in 2nd and in trine with 2nd lord is so good that is what i feel may be right r wrong

    ReplyDelete
  2. also please the 2nd lords star in 1 5 9 of kalapurusha venus 12 and lagnathapathi star in 2nd house

    nice good article by Shri Tamarai kannan sir keep it up best of luck

    ReplyDelete